எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டிற்கு வருவது போல ஆதிசேகரனின் என்ட்ரியுடன் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் எதிர்நீச்சல் தொடரும் முக்கியமானது. இந்த தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்து தனக்கென ரசிகர்களை தன்னகத்தே இழுத்துக் கொண்டவர் நடிகர் மாரிமுத்து. முதலில் இயக்குனாராக அறிமுகமான இவர் பின்னர் வெள்ளித் திரையிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து திடீர் மாரடைப்பால் கடந்த மாதம் 8 ஆம் தேதி காலமானார். அவரின் திடீர் மரணம் எதிர்நீச்சல் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாரிமுத்துவின் மரணத்தை தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்துவின் இடத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. மாரிமுத்து இல்லாத நிலையில், குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என்று கதையை நகர்த்தி வந்தனர்.
இந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்ட ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டிக்கு வருவது போல ஆதிசேகரனின் மாஸ் என்ட்ரியுடன் ப்ரோமோ ஒன்றை எதிர்நீச்சல் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த புரமோவில் முகம் முழுவதுமாக தெரியாவிட்டாலும் ஆதி குணசேகரனாக இனி எதிர்நீச்சல் தொடரில் நடிக்கப்போவது நடிகர் வேல ராமமூர்த்தி தான் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.