மலையாளத்தில் 2006ம் ஆண்டு வெளியான பிரஜாபதி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அதிதி தமிழில் காற்று வெளியிடை,செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
பாய்ஸ் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான சித்தார்த் தெலுங்கு, இந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் சித்தா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவரும் காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை.
இதையடுத்து இருவரும் ஒன்றாக சினிமா நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்நிலையில் நடிகை அதிதி ராவ் ஹைதாரிக்கு நேற்று முன் தினம் பிறந்த நாள். அவருக்குத் திரையுலகினர், ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நடிகர் சித்தார்த்தும், ஆங்கில கவிதை ஒன்றை எழுதி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அதில் அவர் அதிதியை ‘பார்ட்னர்’ என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த அதிதி ராவ், ‘நீங்கள் கவிஞர் என்பது தெரியாது. திறமையான உங்களைப் பற்றி நான் தெரிந்திருக்க வேண்டும்’ என்று கமென்ட்டில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.