நடிகர் விஜய் சேதுபதி மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1000 புத்தகங்களை நன்கொடையாக (donated 1000 books) வழங்கி உள்ளார்.
மதுரை புது ஜெயில் ரோட்டில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் சுமார் 1300 க்கும் மேற்பட்டோர் சிறை கைதிகளாக அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், சிறைச்சாலையில் உள்ள சிறை கைதிகளை நல்வழிப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சமீபத்தில், அதன் ஒரு பகுதியாக சிறை கைதிகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கக்கூடிய வகையிலும், அறிவுத்திறனை வளர்க்கக்கூடிய வகையிலும் சிறை நூலகம் திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, இந்த சிறை நூலக திட்டத்திற்காக, சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன் ஆகியோர் இணைந்து பல்வேறு வகையான புத்தகங்களை சேகரித்து வந்தனர்.
இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக பல்வேறு தரப்புகளில் இருந்தும் இலவசமாக புத்தகங்களை வழங்கி வந்தனர்.
இந்நிலையில், இந்தத் திட்டம் கைதிகளுக்ளை நல்வழிப்படுத்தும் விதமாகவும், ஊக்கப்படுத்தக் கூடிய வகையிலும் இருப்பதால், இந்த திட்டத்திற்காக திரைப்பட நடிகரான விஜய் சேதுபதி, திரைத்துறை டிஐஜி பழனி மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து சிறைத்துறை கைதிகள் பயன்பெறும் வகையில் ஆயிரம் புத்தகங்களை நன்கொடையாக வழங்கி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து கூறிய நடிகர் விஜய் சேதுபதி, ‘சிறைக் கைதிகளை புத்தகங்கள் மூலம் நல்வழிப்படுத்தும் முயற்சியை பாராட்டுகிறேன். இது பற்றி கேள்விப்பட்டதும் நிறைய புத்தகங்களை வழங்கவேண்டும் எனக் கருதினேன். தற்போது, உசிலம்பட்டி பகுதியில் சினிமா ஷூட்டிங்கில் இருப்பதால் முதல் கட்டமாக 1000 புத்தகங்களை (donated 1000 books) வழங்குகிறேன்.
இலக்கியம், கிராமத்து பின்னணி, கைதிகளை நல்வழிப்படுத்தும் போதனை உள்ளிட்ட பல்வேறு விதமான புத்தகங்களை வழங்கியுள்ளேன். சிறைத் துறை அதிகாரிகளின் இந்த முயற்சிக்கு பாராட்டு. இத்திட்டம் வெற்றி பெறவேண்டும்’ என்று கூறினார்.