விமலின் நடிப்பில் வேலுதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் விமல் களவாணி என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் . அடுத்தடுத்து பல நல்ல படங்களை கொடுத்து வந்த நடிகர் விமர் திடிரென எந்த படத்திலும் நடிக்காமல் காணாமல் போய்விட்டார் .

இதனால் குழம்பிய ரசிகர்கள் நடிகர் விமல் தனிப்பட்ட காரணத்திற்காக சினிமாவில் பிரேக் எடுத்தாரா இல்லை அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையா என கேள்வி எழுப்பி வந்தனர் .
இந்நிலையில் விலங்கு என்ற கிரைம் திரில்லர் வெப் சீரிஸ் மூலம் கம்பேக் கொடுத்த விமல் தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார் .

அந்தவகையில் தற்போது விமலின் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் ‘துடிக்கும் கரங்கள்’ . இப்படத்தின் ரிலீஸ் தேதி நீண்ட நாட்களாக அறிவிக்கப்படாத நிலையில் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

வேலுதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக மும்பை மாடல் மனிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சதிஷ், சுரேஷ் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதோ அந்த ட்ரைலரை நீங்களும் பாருங்கள்..