பாலிவுட் நடிகை ஆலியா பட்ட படுக்கையறையில் இருப்பது போன்ற டீப் பேக் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒருவரின் உருவத்தை மற்றொருவரின் உருவத்துடன் மார்பிங் செய்வது போன்ற செய்திகளை நாம் அறிந்திருப்போம். ஆனால், இந்த டீப் பேக் deep fake மூலம் ஒரு நபரைப் போலவே மற்றொரு போலியான உருவத்தை இந்த AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்க முடியும். அதுவும் தத்ரூபமாக இருப்பதால் அது உண்மை என நம்பி விடுகின்றன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஏராளமான டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குப்பாக நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ சமூக வலைத்தங்களில் வைரலாகியதை அடுத்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனை அடுத்து , டீப் ஃபேக் வீடியோக்களை வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
‘மேலும் டீப் ஃபேக்’ விவகாரம் ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தல் என குறிப்பிட்டுள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இதனைத் தடுக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக முன்பு தெரிவித்தார்.
மத்திய அரசு, டீப் பேக் வீடியோக்கள் குறித்து கடுமையாக எச்சரித்தும், நடிகை ராஷ்மிகா, கத்ரீனா, கஜோலைத் தொடர்ந்து நடிகை அலியா பட்டின் டீப் ஃபேக் ஆபாச வீடியோ இணையத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் நடிகை ஆலியா பட் படுக்கையறையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இப்படி நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோக்கள் தொடர்ந்து பரவி வருது பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.