லைகா நிறுவனம் அஜித்தின் “ஏகே 62” படத்தின் அறிவிப்பை வெளியிடும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள், ரஜினியின் 170-வது (thalaivar 170) படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் லைகா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானதை அடுத்து, அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில், அஜித் நடிக்க உள்ள அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது.
மேலும், இந்த படத்தை அனிருத் இசையமைபில், விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், விக்னேஷ் சிவனை படத்திலிருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை இயக்குனராக கமிட் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது லைகா நிறுவனம்.
மேலும், தற்போது வரையிலும் விக்னேஷ் சிவன் எதற்காக படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்கிற தகவலை இதுவரை லைகா நிறுவனம் வெளியிடவில்லை. இதனால், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில், லைகா நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், இன்று காலை 10.30 மணிக்கு பெரிய அறிவிப்பு வர உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.
இதனைப் பார்த்த அஜித்தின் ரசிகர்கள் ஏகே 62 படத்தின் அறிவிப்பை தான் லைகா நிறுவனம் வெளியிடப் போகிறது என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இதனையடுத்து, லைகா நிறுவனம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரஜினியின் 170-வது (thalaivar 170) படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
மேலும், லைகா நிறுவனம் மார்ச் 2-வது வாரத்தில் ஏகே 62 அப்டேட்டை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.