நடிகர் அஜித் Good Bay Ugly படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு சிறப்பு போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வந்த விடாமுயற்சி படத்தின் அனைத்து பணிகளும் இனிதே முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தற்போது நடிகர் அஜித் தனது அடுத்த படமான Good Bay Ugly படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் அஜித் Good Bay Ugly படத்தின் டப்பிங் பணியை தொடங்கி உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட்டுக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த அட்டகாசமான அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி Good Bay Ugly திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.