தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் . இவரது நடிப்பில் தற்போது உருவாக உள்ள ஏ.கே.61 படத்தை போணி கபூர் தான் தயாரிக்க உள்ளார்.இப்படத்தை H வினோத் இயக்கி வருகிறார்.சமீப காலமாக இவர் நடிக்கும் படங்களுக்கு V என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் தான் வைக்கப்பட்டு வருகின்றன.
வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம், வலிமை எனத் தொடர்ந்து தனது படங்களில் V நம்பிக்கையைப் பாலோ செய்து வருகிறார் அஜித்.இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்கிப் படப்பிடிப்பு வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்காக நடிகர் அஜித் தீவிர உடற்பயிற்சி செய்து 25 கிலோ வரை உடல் எடையைக் குறைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதனைத் தொடர்ந்து பெல்ஜியம் விதிகளில் நடிகர் அஜித் உலாவரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
AK 61 அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி நடிகர் அஜீத்குமார் ஐரோப்பிய நாடுகளில் BIKE பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
பெல்ஜியத்தில் பிரபலமான ப்ரூப்ஸ் மார்க்கெட் ஃவர்ட் பகுதியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது