திமுக காங்கிரஸ் இந்தி கூட்டணியின் நோக்கம் சக்தி வழிபாட்டை அழிக்க முயற்சிப்பதே என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
pm modi in salemசேலம் மாநகரில் இன்று பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தமிழகத்தில், தமக்கும், பாஜகவுக்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும், நாடே இன்று கவனித்துக் கொண்டிருக்கிறது என்று பெருமையுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,திமுக காங்கிரஸ் அமைத்துள்ள இந்தி கூட்டணியின் நோக்கம், இந்து மதத்தை அழிப்பது மட்டுமே என்பது, அவர்களின் முதல் கூட்டத்தில் இருந்தே தெளிவாகிவிட்டது.
இந்து மதத்தில் சக்தி வழிபாடு எத்தனை முக்கியமானது என்பதைப் பற்றிப் பேசிய நமது பிரதமர், கோட்டை மாரியம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மன், சமயபுரம் மாரியம்மன் என, நமது வழிபாடே பெண்களை முன்னிறுத்திய சக்தி வழிபாடாகத்தான் இருக்கிறது.

இதையும் படிங்க: சக்தி-க்கு புதுவிளக்கம் சொன்ன ராகுல்! – இது எப்படி இருக்கு?
ஆனால், திமுக காங்கிரஸ் இந்தி கூட்டணியின் நோக்கம் சக்தி வழிபாட்டை அழிக்க முயற்சிப்பதே என்றும் குற்றம் சாட்டினார். வேண்டுமென்றே, இந்து மதத்தை அவமதிப்பதும், திட்டமிட்டு, இந்து மதத்துக்கு மட்டுமே எதிராகச் செயல்படுகிறார்கள் என்று கூறினார்.
மேலும், இந்திக் கூட்டணிக் கட்சிகள், தமிழர்களின் பாரம்பரியமான, இந்து மத அடையாளமான செங்கோலை, புதிய நாடாளுமன்ற மையக்கட்டிடத்தில் வைப்பதை தடுக்க முயற்சித்தார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் கடவுளை பெண்வடிவில் சக்தியாக, பாரத அன்னையாக வழிபட்ட மகாகவி பாரதியார் வழியில், தாமும் ஒரு சக்தி உபாசகர் என்று குறிப்பிட்ட பிரதமர் ,சக்தி வழிபாட்டை அழிக்க நினைத்தவர்கள் அனைவரும் அழிந்து போனது தான் வரலாறு என்று குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா கூட்டணியின்pm modi in salem அழிவு, ஏப்ரல் 19 அன்று முதல் கட்டத் தேர்தல் நடக்கவிருக்கும் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கப்போகிறது என்று உறுதியுடன் தெரிவித்தார்.
முன்னதாக மணிப்பூரில் நடைபெற்ற நியாய யாத்திரையின் நிறைவு கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி..ராகுல் ஒரு சக்தியின் முகமூடி தான் மோடி என்று கூறிய அவர் சக்திக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம்.
இப்படிப்பட்ட ஒரு சக்திதான் CBI,IT,ED, ஊடகங்கள், இந்திய தொழில்துறை என இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியலமைப்பையும் தனது பிடியில் வைத்துள்ளது.
இந்த அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி கடன்களை தள்ளுபடி செய்கிறார்.
இந்த அதிகாரம்தான் இந்தியாவின் துறைமுகங்கள், இந்தியாவின் விமான நிலையங்கள் விற்கிறது. ஆனால் இந்தியாவின் இளைஞர்களுக்கு அக்னிவீரன் பரிசு வழங்கி அவர்களது தைரியத்தை உடைக்கிறது என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.