‘நான் போக வேண்டும்’ என்ற தலைப்பில், பிரதமர் மோடியின் வளர்ச்சி, ஆட்சி போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் பாஜக சார்பில் ஒரு அனிமேஷன் வீடியோ (animation illustrating) தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி சாதாரண தேநீர் விற்கும் நபராக தனது வாழ்க்கையைத் தொடங்கி குஜராத் முதலமைச்சராக ஆனதும், பின்னர் பிரதமராகவும் உயர்ந்த அவர், இந்தியாவை வலிமையான பொருளாதாரம் நோக்கி வழிநடத்திச் செல்வது குறித்தும் அந்த வீடியோ விவரிக்கிறது (animation illustrating).
ஒரு உயரமான படிகட்டுகளில் பல தடைகளைத் தாண்டி ஏறிச் சென்று கொண்டே இருப்பது போல உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அனிமேஷன் வீடியோவில்,
பிரதமர் நரேந்திர மோடி தேசிய அரசியலுக்குள் நுழைந்தபோது, அவர் ரயிலில் தேநீர் விற்றவர் என்றும் அமெரிக்காவுக்குள் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டது என்றும், 100 தலை ராவணன் என்று பல விமரிசனங்களை எதிர்க்கட்சியினர் முன் வைத்தனர் போன்ற காட்சிகளுடன் தொடங்கும் அந்த வீடியோ,
தூய்மை இந்தியா திட்டம், பிரதமரின் முத்ரா திட்டம், இலவச சிலிண்டர், ஏழைகளுக்கு மானியத்தில் கோதுமை மற்றும் பருப்பு, ஜன்தன் கணக்கு, பிரதமரின் வீட்டு வசதி திட்டம், குடிநீர் திட்டம், விவசாயிகளுக்கு மானியம் என நாட்டு மக்களுக்கு தொடர்ந்து பல நல திட்டங்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியதை அனிமேஷன் வீடியோ விவரிக்கிறது.
மேலும், இந்த பயணத்தின் போது எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள், அவதூறுகள் அனைத்தும் பிரதமர் மோடியிடம் பலிக்கவில்லை என்றும், மேலும், ரஃபேல் ஊழல், பிபிசி ஆவணப்படம் போன்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் தாண்டி, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி பிரதமர் மோடி பயணிப்பதாக அந்த விடியோ நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகிறது.
मुझे चलते जाना है… pic.twitter.com/1NLvbV7L8y
— BJP (@BJP4India) March 14, 2023