தளபதி விஜய்யின் அன்பு மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் நீண்ட நாட்களாக படித்து வந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
வெளிநாடுகளில் படிக்கும்போதே தனது நண்பர்களுடன் சேர்ந்து குறும்படத்தை இயக்கிய ஜேசன் சஞ்சய், தற்போது பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழ் சினிமாவில் இயக்குநராக என்ட்ரி கொடுக்க உள்ளார்.

இந்த படத்திற்கான ஒப்பந்த பத்திரத்தில் ஜேசன் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்கள் வெளியாகி செம வைரல் ஆன நிலையில் ஜோசன் சஞ்சய்க்கு தளபதி விஜய்யின் ரசிகர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர் .
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக கலக்கி வரும் நடிகர் விஜய்யை போல ஜேசன் சஞ்சய் நடிப்பில் கலக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரது தாத்தாவை போல் படம் இயக்குவதில் காதல் கொண்டுள்ளார் .

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த புதிய படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகை குறித்த தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்ற முழு விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் இசையமைக்க ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் அவர்களுக்கு ஏற்கனவே பல மெகா பட்ஜெட் படங்கள் வரிசையில் இருக்கும் நிலையில் அதில் ஒன்றாக ஜேசன் சஞ்சய் படமும் இருப்பது படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருக்கும் என தளபதி ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.