சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என 20, 30 வருடங்களாக எனக்குள் இருந்த ஆதங்கம்தான் ‘மாமன்னன்’ கதை என அப்படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாக பேசியிருப்பது பலரையும் மெய்சிலிற்க வைத்துள்ளது .
இளம் தலைமுறைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீண்டாமை ஒழிப்பை மையமாக கொண்டு புரட்சி இயக்குனர் மாரி செல்வராஜின் துல்லியமான இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படம் மாமன்னன்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நவரச நாயகி கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வைகை புயல் வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதால் ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்க்கிடையே திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது :
மாமன்னன்’ படத்தில் வடிவேலு சார் நடித்த ஒரு காட்சி பார்த்தேன்; பைக்ல உதயநிதி கூட போகுற அந்த ஒரு காட்சியில அவரு கண்ணுல அவ்வளவு விஷயம் தெரிந்தது; அதை பார்த்ததும் ரொம்ப சிறப்பா பண்ணணும்னு தோணுச்சு
சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என 20, 30 வருடங்களாக எனக்குள் இருந்த ஆதங்கம்தான் ‘மாமன்னன்’ கதை என்னுடைய இசையால் ஒன்றும் செய்யமுடியவில்லை, அதனால் இவர்களோடு சேர்ந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார் .