அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார்(Ashokumar) கைது செய்யப்படவில்லை என்று அமலாக்க துறை தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை இரண்டு முறை சம்மன் அனுப்பி நேரில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அசோக் குமார்(Ashokumar) நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலமே அனைத்திற்கும் பதில் அளித்து வந்தார்.
இதனையடுத்து கேரளா மாநிலம் கொச்சியில்அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை நேற்று பிற்பகலில் கைது செய்யப்பட்டதாகவும், அடுத்தகட்டமாக அவரை சென்னைக்குக் கொண்டு வரவும் அமலாக்கத் துறை திட்டமிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில்,அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்க துறை தெரிவித்துள்ளது.