அசோக் செல்வன் மற்றும் சாந்தனுவின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள Blue Star திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று கோலாகலமாக வெளியாகி உள்ளது.
ஜெயக்குமார் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார்.
மிக சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அவரது காதல் மனைவி கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார் .
அசோக் மற்றும் கீர்த்தியுடன் சேர்ந்து சாந்தனு பாக்யராஜ் பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலரை ரசிகர்கள் அனைவரும் ரசித்து பார்க்க நிச்சயம் இப்படம் வெற்றிபெறும் என அப்போதே பெரிகாலவில் பேசியப்பட்டது .
காரசாரமான என்ட்ரியுடன் அசோக் மற்றும் சாந்தனு எதிர் எதிர் கிரிக்கெட் வீரர்களாக வர . கிரிக்கெட் விளையாட்டின் மூலம் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. இதற்கிடையில் நம்ப அசோக் மற்றும் கீர்த்தி பாண்டியனின் காதல் காட்சிகளும் வருகிறது .
அதிலும் குறிப்பாக கிரிக்கெட்லயே எனக்கு ரொம்ப பிடிச்சது ஆல் ரவுண்டர் தான் என கீர்த்தி கூற நானும் ஆல் ரவுண்டர் தாண்டி என அசோக் கூற இவர்கள் கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகி உள்ளது
இறுதியில் எல்லா படங்களிலும் வருவது போல் பரபரப்பான காட்சிகளுடன் படத்தை முடிவுக்கு கொண்டு வருகின்றனர் .
தமிழ் சினிமாவில் வளர்ந்த்து வரும் நடிகர்கள் பட்டியலில் சரசரவென முன்னேறி வருபவர் நடிகர் அசோக் செல்வன் .
Also Read : https://itamiltv.com/toppur-road-accident-udhay-tweet/
இவர் எடுக்கும் திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படமும் அசோக் செல்வனுக்கு வெற்றிப்படமாக அமையுமா இல்லையா என்பதை தற்போது பார்க்கலாம்.
இதுமட்டுமின்றி ப்ளூ ஸ்டார் படத்துடன் சேர்ந்து இன்று மேலும் 3 படங்கள் வெளியாகி உள்ளன ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலுன் தூக்குத்தூரை உள்ளிட்ட திரைப்படங்கள் இன்று வெளியாகி உள்ளன.
Blue Star படத்தின் ட்விட்டர் ரிவிஎவ் :