ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் பயன்படுத்திய தொப்பி ஒன்று இமாலய விலைக்கு ஏலம் போன சம்பவம் அனைவரையும் ஆசிரியப்படுத்தி உள்ளது.
1947-48 ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் விளையாடிய போது அவர் அணிந்திருந்த ‘பேகி பச்சை’ நிற தொப்பி, சிட்னி மாகாணத்தில் சுமார் 2.63 கோடிக்கு ஏலம் போயுள்ளது .
Also Read : மஹாராஷ்டிரா முதலமைச்சராகிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ்..!!
பிராட்மேனின் இந்த தொப்பி வெயிலால் மங்கியும் , பூச்சிகளால் சிறிது சிதைந்ததும் உள்ளதாக குறிப்பிட்டும் மிகப்பெரிய தொகைக்கு ‘தொப்பி’ ஏலம் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர இந்தியாவின் முதல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயண தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்திருந்தது. ஆனால் தற்போதுஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா 0-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.