ஆதீனம் திருமணம் செஞ்சுக்கலாமா?
தவறான முன்னுதாரணம்..
தமிழக வரலாற்றிலேயே இதுபோல நடக்கல!!
பொறுப்புகளையெல்லாம் திரும்ப ஒப்படைச்சுட்டு வீட்டுக்கு போங்க..
சூரியனார் கோவில் மடத்துல என்ன நடக்குது? பாக்கலாம்!
ஐ தமிழ் நேயர்களுக்கு வணக்கம்
கந்தப் பரம்பரை சூரியனார்கோயில் ஆதீனம் 28 – வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திடீர்னு கர்நாடகத்தைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ என்ற பெண்மணியைத் திருமணம் செஞ்சுக்கிட்ட சம்பவம், மக்கள் மத்தியில பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சூரியனார்கோயிலில், 14 – ம் நூற்றாண்டில் சிவாக்கிரக யோகிகளால் தோற்றுவிக்கப்பட்ட சூரியனார்கோயில் ஆதீன திருமடம் அமைஞ்சிருக்கு.
இந்த மடத்தில 27 -ஆவது குருமகா சந்நிதானமாக அருளாட்சி செய்த சங்கரலிங்க தேசிய பரமாச்சாரியார் சுவாமிகள் கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி 3 -ஆம் தேதி, தமது 102 – வது வயதில் முக்தி அடைஞ்சாரு.
அவருக்கு அப்புறமா திருவாவடுதுறை ஆதீனமடத்தில் தம்பிரானாக இருந்தவருக்கு, ‘மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்’ என்று திருநாமம் சூட்டி, ஆதீனகர்த்தராகப் பதவியில் அமர்த்தி வைச்சாங்க.
இத்தகைய சூழல்ல தான் கர்நாடாகா ராம்நகர், சன்ன மகஹள்ளியைச் சேர்ந்த சிவராமையா மகள் ஹேமாஸ்ரீ என்பவரை கடந்த மாதம் 10 – ம் தேதி பெங்களூரூவில், சூரியனார்கோயில் ஆதீனம், பதிவு திருமணம் செஞ்சுக்கிட்டாரு.
இந்த திருமணச் செய்தி புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாச்சு.
அதே நேரத்தில ஆன்மிக வட்டாரத்திலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பி புயலா மாறிருக்கு.
முதல்ல …இதுபற்றி திருமடங்களைச் சேர்ந்த பெரியவங்க கிட்ட பேசினோம்.
“தொன்மையான சைவத் திருமடங்கள்ள இரண்டு வகைகள் உண்டு. ஒன்று…. வெள்ளை வேட்டி மடம் .அவங்க காவி அணிய மாட்டாங்க. வெள்ளை வேட்டி தான் அணிவாங்க.
மனைவி மற்றும் குடும்பத்துடன் வசிச்சுட்டே ஆன்மீகப் பணிகளையும் செஞ்சுட்டு வருவாங்க.
அவங்களுடைய இரத்த வாரிசுகள் தொடர்ந்து மடாதிபதியா வருவாங்க. உதாரணத்திற்கு வேளாக்குறிச்சி ஆதீனம், நாச்சியார்கோயில் ஆதீனம், துலாப்பூர் ஆதீனம் போன்றவற்றை சொல்லலாம்.
இரண்டாவது வகை.. துறவிகள் மடம். தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள், செங்கோல் போன்ற ஆதீன மடங்கள் இவ்வகையைச் சேர்ந்தது தான்.
இவர்களது பூஜை முறையே வேறு. முதல்ல கட்டளை தம்பிரானாக சிவத்தொண்டு செய்து, அதன் பிறகுதான் ஆதினகர்த்தராக வரமுடியும்.
கட்டளை தம்பிரான் ஆவதற்கு முன்நாடி அவங்க நான்கு வகை தீட்சைகளை பெற்றிருக்கனும்.
அதாவது சைவ சமயத்தை ஏற்றுக் கொண்டு ருத்ராட்சம் அணிந்து, திருநீறு பூசி, சிவபெருமானிடம் பஞ்சாட்சர மந்திரங்கள் ஓதி ‘சமய தீட்சை’ பெறனும்.
அடுத்து சிவபெருமானை உள்ளடக்கி, அனைத்து தெய்வங்களையும் பூக்களால் உருவாக்கி பூஜை செஞ்சு சிவபெருமானை சந்தனம், விபூதி, சாணி உருண்டை, ருத்ராட்சம் போன்றவற்றால் உருவம் செய்து வழிபடும் ‘சனிகலிங்க தீட்சை’ பெறனும்.
மூன்றாவதா சிவலிங்கம் வெச்சு அபிஷேக அர்ச்சனை செய்யும், ‘உடையவர் தீட்சை’ பெறனும்.
இறுதியா பற்றற்று.. மண்ணாசை,பெண்ணாசை, பொருளாசை அற்று முற்றிலும் துறவுநிலை மேற்கொள்ளும் ‘ஞான தீட்சை’ அல்லது ‘நிர்வாண தீட்சை ‘பெறனும்.
இந்த நான்கு தீட்சைகளும் முறையாக குருமார்களிடமிருந்து பெற்றவர்கள்தான் கட்டளை தம்பிரானாக, இளைய சந்நிதானமாக, குருமகா சந்நிதானமாக வரமுடியும்.
திருமணத்திற்குப் அப்றமா துறவறம் பூண்டு இப்படி வந்தவர்களும் சிலர் உண்டு.
ஆனா, தமிழக வரலாற்றிலேயே துறவறம் பூண்டு, ஆதினகர்த்தராக பதவியில் இருக்கும் போதே இல்லற வாழ்க்கையில இணைஞ்சிருப்பது சூரியனார்கோயில் ஆதீனம் மட்டும் தான்.
இது ஏற்க தக்கதல்ல. இது ஒரு தவறான முன்னுதாரணம். அவருக்கு சந்நிதானமாக பதவி தந்த, திருவாடுதுறை தலைமை மடத்தில, தனது பொறுப்புகளை திரும்ப ஒப்படைச்சுட்டு, அவர் விரும்பிய வாழ்க்கையை ஏற்றுகொண்டு போயிருக்கலாம் அப்டீன்னு சொன்னாங்க.
இது சம்மந்தமா சூரியனார்கோயில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கிட்டயே நமது ஐ தமிழ் தாய் சேனல் சார்பா விளக்கம் கேட்டோம். அதுக்கு அவர் குடுத்த விளக்கத்த பாக்கலாம்.
ஹேமாஸ்ரீ ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்துவிட்ட நிலையில இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திருமணம் குறித்து இந்து-சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சூரியனார்கோயில் ஆதீனகர்த்தரிடம் விசாரணை செஞ்சு விளக்கம் கேட்டுருக்காங்க.
அதுபற்றி திருவாவடுதுறை தலைமை மடத்தில கேட்டபோ.., “அறநிலையத்துறையிடம் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்துருக்கு. ஆதீனகரத்தாராக இருப்பதற்கான அடிப்படை தகுதிகள், தொன்றுத்தொட்டு கடைபிடிக்கப்படும் நெறிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்திட்டு வரோம். சீக்கிரமே உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு மடத்தின் அறிக்கையை வெளியிடுவோம்னு சொல்லிருக்காங்க.
ஆக, 54 வயது ஆதீனம், 47 வயது ஹேமாஸ்ரீ திருமணப் பந்தம், ஆன்மிக உலகில் ‘பொக்ரான்’ குண்டுவெடிப்பை ஏற்படுத்தி இருக்குனு தான் சொல்லணும்..
இது எதில்போய் முடியும் அப்டீன்றத பொறுத்திருந்து பாப்போம்.