சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் ஜெர்ஸியில், Host நாடான பாகிஸ்தானின் பெயரை அச்சடிக்க பிசிசிஐ மறுப்புத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெற உள்ளது . இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, வங்கதேசமும் அணிகளும் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் பல இழுபறிக்கிடையே இந்தியா விளையாட சம்மதித்த நிலையில் தற்போது இந்த தொடருக்கான இந்திய அணியின் ஜெர்ஸியில், Host நாடான பாகிஸ்தானின் பெயரை அச்சடிக்க பிசிசிஐ மறுப்புத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : இந்தியாவிலேயே பள்ளிக்கல்வியில் வளர்ச்சி கண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது – அன்பில் மகேஷ்
சமீபத்தில் இந்தியா Host செய்திருந்த 2023 ODI உலக கோப்பை தொடரில் பங்கேற்று, இந்தியாவுக்கே வந்து விளையாடிய பாகிஸ்தான், தங்களது ஜெர்ஸிகளில் இந்தியா பெயரை அச்சடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் பேச்சு பொருளாக வலம் வரும் நிலையில் கிரிக்கெட்டுக்குள் அரசியல் வந்துவிடக்கூடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேதனை தெரிவித்துள்ளது.
கிரிக்கெட்டுக்குள் அரசியலை கொண்டு வருகிறது பிசிசிஐ. இது விளையாட்டுக்கு நல்லதல்ல.
பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய மறுத்துவிட்டனர். CT தொடக்க விழாவிற்கு தங்கள் கேப்டனை பாகிஸ்தானுக்கு அனுப்ப விரும்பவில்லை. இப்போது அவர்கள் தங்கள் ஜெர்சியில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் பெயரை அச்சிட விரும்பவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன. ஐசிசி இதை நடக்க விடாது என்று நம்புகிறோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.