சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பிப்., 23 அன்று துபாயில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில், ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் வரும் பிப். 19 முதல் மார்ச் 9 வரை கோலாகலமாக நடைபெற உள்ளது . இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான போட்டிகள் கராச்சி, லாகூர், ராவல்பிண்டியில் நடக்கவுள்ளன.
இந்நிலையில் சில அரசியல் காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் சென்று போட்டியில் பங்கேற்க மறுத்தது. இதனையடுத்து இந்திய அணி விளையாடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்திட முடிவு செய்யப்பட்டது .
இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.
Also Read : தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துள்ளது – அண்ணாமலை பகீர் பேட்டி..!!
‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், இப்போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி., அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் விவரம் :
பிப்., 20- இந்திய – வங்கதேசம்
பிப்., 23- இந்தியா – பாகிஸ்தான்
மார்ச் 2- இந்தியா – நியூசிலாந்து
மற்ற அணிகள் பங்கேற்கும் போட்டிகள் :
பிப்., 19- பாக்., – நியூசிலாந்து
பிப்.,21- ஆப்கன்- தென் ஆப்ரிக்கா
பிப்.22- ஆஸி., – இங்கிலாந்து
பிப்., 24- வங்கதேசம் – நியூசி.,
பிப்., 25- ஆஸி.,- தென் ஆப்ரிக்கா
பிப்., 25- ஆப்கன் – இங்கிலாந்து
பிப்.,27- பாக்.,- வங்கதேசம்
மார்ச் 01- தென் ஆப்ரிக்கா – இங்கிலாந்து
லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள், வரும் மார்ச் 4, 5ல் நடக்கும் அரையிறுதியில் விளையாடும். இறுதிப்போட்டி மார்ச் 9ல் நடக்கும். இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், போட்டிகள் துபாயில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.