தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நோக்கி நகர்ந்தது.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்று (13.11.24) புதன்கிழமை இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுஇழந்து, காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்கத் தொடங்கும் என்றும்,
இதனால் தமிழ்நாட்டில் வருகிற 16-ஆம் தேதி சனிக்கிழமை வரை மழை பொழிய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சீனாவில் மன அழுத்ததில் கார் ஓட்டிய நபரால் ஏற்பட்ட விபத்தில் 35 பேர் பலி!
இந்நிலையில், இன்று (13.11.24) தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.