’சந்திரமுகி 2’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ’சந்திரமுகி 2’ லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி உள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ரவி மரியா, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.
வரும் விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் ‘சந்திரமுகி 2’ வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் வேட்டையன் ராஜா கேரக்டரில் ராகவா லாரன்ஸ் காணப்பட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ முதல் பாகத்தில் திரைப்படத்தில், வேட்டையன் ராஜா என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் சில நிமிடங்கள் மட்டும் வருவார். ஆனால் ’சந்திரமுகி 2’ திரைப்படத்தில் படம் முழுவதும் வேட்டை ராஜா கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சந்திரமுகி 2’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.