சீனாவில் கொரனோ தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அதிக மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரில் தற்பொழுது கொரனோ பரவல் குறைந்து வருவதால் வரும் ஜூன் 1 ம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடந்து மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேவரவும் ,வணிக வளாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் ஷாங்காய் நகரில் பொது போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, 30கும் மேற்பட்ட பூங்காக்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது .