சீனாவில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ‘Love Education’ குறித்து கற்பிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள சீனாவில் பிறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து , கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் காதல், திருமணம், குடும்ப உறவு ஆகியவை குறித்த புரிதலை ஏற்படுத்தும் பாடத்திட்டத்தை கற்பிக்குமாறு சீனா அரசு அறிவுறுத்தியுள்ளது.
Also Read : Spotify-ல் அதிகம் கேட்கப்பட்ட பாடல்களின் பட்டியலில் ‘கட்சி சேர’ முதலிடம்..!!
இளைஞர்கள் காதல் மற்றும் திருமண உறவை ஒரு பொறுப்பாக நினைத்து அஞ்சுவதால், நேர்மறையான திருமண உறவுகள் குறித்த கல்வி, காதல் மீதான அவர்களின் பார்வையை மாற்றும் என நம்புகின்றனர்.
ஏற்கனவே காதல் மற்றும் திருமணம் குறித்து பல முறைகளில் சீன அரசு பல யுக்திகளை கையாண்டு வந்த நிலையில் தற்போது கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடி படமாகவே இதை கற்பிக்க சொல்லியுள்ளது.