நடிகை சமந்தா தனது மருத்துவ சிகிச்சைக்காக பிரபல ஹீரோ ஒருவரிடம் இருந்து ரூ.25 கோடி கடன் வாங்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
நடிகை சமந்தாவுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆட்டோ இம்யூன் நோயான மயோசிடிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், சமீபத்திய ஆண்டுகளில்ம் பல சவால்களை எதிர்கொண்டார். முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் விவாகரத்து உட்பட அடுத்தடுத்து பல சிக்கல்களை எதிர்கொண்டார்.
இந்நிலையில், அவற்றையெல்லாம் கடந்து நடிகை சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்திலும், வருண் தவானுடன் இணைந்து சிட்டாடெல் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார்.
மேலும், கடந்த வருடம் மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அடுத்தடுத்த தான் நடிக்கவிருந்த படங்களுக்காக தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்ற முன் பணத்தையும் திருப்பி அளித்ததாக கூறப்பட்டது.
தற்போது சமந்தா விடுமுறையை கழிக்க இந்தோனேஷியாவில் உள்ள பாலி என்ற தீவுக்கு தனது தோழியும் மேக்கப் கலைஞருமான அனுஷா சுவாமி என்பவருடன் சென்றிருக்கிறார். அங்கே அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
மேலும், தற்போது சமந்தா தனது மருத்துவ செலவுக்காக பிரபல தெலுங்கு ஹீரோவிடமிருந்து ரூ.25 கோடி வாங்கியதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், அந்த நடிகர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
மேலும், இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதோடு, பாலி சென்று திரும்பிய பிறகு நடிகை சமந்தா சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.