90களில் வெளிவந்த படங்களில் சாமி படங்களுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் அவரவேற்பு இருந்து வந்தது அந்த வகையில் கமர்சியல் படங்களுக்கு மத்தியில் சாமி படங்களும் மாபெரும் ஹிட் அடித்து வந்தது. அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் சாமி படங்களை பார்க்க வரும் பொழுது தியேட்டர்களிலேயே சாமியாடிய சம்பவங்களும் நடந்துள்ளது.
அந்த அளவுக்கு 90s களில் வெளியான சாமி படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களுக்கு சாமி படம் என்று கூறினாலே முதலில் ஞாபகம் வருவது பெரும்பாலும் அம்மன் படமாக தான் இருக்கும்.

அப்படி அம்மன் என்று சொன்னால் உடனே நினைவுக்கு வருவது ரம்யா கிருஷ்ணன் தான். சாமி என்றால் ரம்யா கிருஷ்ணன் மாதிரி தான் இருக்கும் என்று நம்பிய 90ஸ் கிட்ஸ் இருக்கிறார்கள்.
பேய் படங்களை கூட அசால்ட்டாக பார்க்கும் 90ஸ் கிட்ஸ் அம்மன் படத்தில் வரும் மொட்டை மந்திரவாதி சொல்லும் “ஜண்டா” வசனத்தைக் கேட்டு அல்லு விட்டதும் மறக்க முடியாது. கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான “அம்மொறு” என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக வெளிவந்தது தான் அம்மன் திரைப்படம்.

கிட்டத்தட்ட இரண்டு கோடி செலவில் உருவான இந்த படத்தில் கிராபிக்ஸ்க்கு மட்டும் சுமார் 80 லட்சம் செலவாகியதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சௌந்தர்யா, வடிவுக்கரசி, சுந்தர், ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருந்தனர்.
90களில் வெளியான இந்த படத்தில் திகிலுக்கும், அமானுஷ்யத்திற்கும் பஞ்சமில்லாமல் மிரட்டி இருந்தனர். மேலும் அம்மன் படத்தில் ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் மற்றும் குழந்தை அம்மனுடைய கதாபாத்திரம் இரண்டுமே இன்றும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.

அம்மன் படத்தில் பவானி என்று குழந்தை குரலில் பேசிய அந்த சிறுமி இப்பொழுது என்ன செய்கிறார்? சினிமாவில் இருக்கிறாரா? இல்லையா? என்ற பல கேள்விகள் நம்மில் பலருக்கும் இருந்தது.
இந்நிலையில் அந்த குழந்தையின் பெயர் சுனைனா பாதம் என்றும், அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் எம்பதும், கிட்டத்தட்ட தமிழில் 25 படங்களில் நடித்து விட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

அந்தவகையில் சுனைனா பாதம் 1996 ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி விட்டார். தற்போது திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். அவர் “NIR pregnant women” என்று வெளியிட்ட வீடியோக்கள் மக்கள் மத்தியில் பிரபலமானது.

அதனை தொடர்ந்து, கிடைக்கும் வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வந்துள்ளார். குறிப்பாக சமந்தாவின் “ஓ பேபி” மற்றும் அஜித்தின் வலிமை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.