வெளியான “தளபதி 67”.. மிரட்டலான புரமோவுடன் (promo)… இதுதான் படத்தின் டைட்டிலா? ஷாக் கொடுத்த லோகேஷ்..
“தளபதி 67” பட அப்டேட்டுகள் கடந்த இரண்டு நாட்களாக அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா அவருடன் இணைகிறார். மேலும், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இவர்களுடன் அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான தளபதி பட பூஜையின் வீடியோவில் நடிகர் ஜார்ஜ் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இந்த படத்தில் நெப்போலியன் என்ற கான்ஸ்டபிளாக நடிக்கிறார்.
மேலும், விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தில் கலக்கி இருந்த வசந்தி சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்த குழுவினரோடு இருந்த புகைப்படம் வைரலானது. மேலும், தளபதி 67லில் நெப்போலியனும், ஏஜென்ட் டீனாவும் இருக்கிறார்கள் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இந்நிலையில், தளபதி 67 படத்தின் அறிவிப்பு குறித்து வெளியானதிலிருந்து, சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த படத்தின் தலைப்பு “கே” என்ற ஆங்கில எழுத்தில் துவங்குவதாக முதலில் கூறப்பட்டது.
இந்நிலையில், தளபதி 67 வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருந்த போது கருடன் என்ற போஸ்டரும் சமூக வலைதளங்களில் பரவியது.
முன்னதாக, மாஸ்டர் படத்தின் தலைப்பையும் பலரும் வாத்தி என்று கணித்த நிலையில், அவர்களின் கணிப்பை லோகேஷ் பொய்யாக்கியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது தளபதி 67 படத்தின் மிரட்டலான புரமோ வெளியாகியுள்ளது. மேலும், அந்த வீடியோவில் படத்திற்கு ‘லியோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.