நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துவரும் ‘மார்க் ஆண்டனி’ (mark antony) என்ற திரைப்படம் டைம் மெஷினை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் என்றும், இதில் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த படத்தில் விஷால் – எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் மூன்று விதமான காலகட்டங்களில் வருவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்றார் போல் தனித்தனி தோற்றங்களும் அவர்களுக்கு படத்தில் உள்ளது என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தின் வெளியீடு தேதி பட குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த படம் வரும் ஜூலை 28ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தின் (mark antony) டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற நிலையில், வரும் ஜூலை 28ஆம் தேதி மார்க் ஆண்டனி வெளியாக உள்ளது என்றும், இதற்கான ட்ரெய்லரும், படத்தின் பாடல்களும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.