லேடி சூப்பர்ஸ்டாராக வலம் நயன்தாரா கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறார்.

தமிழில் ‘ஐயா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது பாலிவுட் படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

குறிப்பாக தமிழ், தெலுங்கில் 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா, தற்போது தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் முன்னிலை படுத்தி நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார். இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. இந்த நிலையில் நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், நயன்தாரா ‘GQ இந்தியா’ இதழ் நடத்திய விருது விழாவில் ‘மிகவும் செல்வாக்கு மிக்க இளம் இந்தியர்கள் 2024’ விருதை வென்றுள்ளார்.

இந்த விருது விழாவில் நயன்தாரா அணிந்திருந்த உடை நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்த ஆடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும் நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார்.

அதற்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன. ஹாலிவுட் ஹீரோயின் போல சிக்கென்ற டீப் லோ நெக் ஆடை அணிந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா கலக்கியிருக்கிறார்.