முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்(mk stalin) நேற்று திடீரென சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் (apollo-hospital)அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,உயிர்களைத் தொடும் மருத்துவமனைகள் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின்(mk stalin) அவர்கள் வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.அவர் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு தமிழக நீர்வள அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.ஆர். பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ”முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார். ஒரு சில சோதனைகள் அதிகாலை மேற்கொள்ள உள்ள நிலையில் அதனை மேற்கொண்டு செவ்வாயன்று வீடு திரும்பவார்” என தெரிவித்தார்.