நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுகிறது என்றும் இதன் காரணமாக மின்தடை ஏற்படும் என்றும் செய்ததிகள வெளியாகி வரும் நிலையில், இது குறித்த செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “இந்தியா ஒரு மின் உபரி நாடு. மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக பரவும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றது என்று தெரிவித்தார்.
மேலும், நாட்டின் நிலக்கரி விநியோகச் சங்கிலியில் எந்த பாதிப்பும் இல்லை” எனத் தெரிவித்த அவர், அமைச்சரின் அறிக்கையின்படி மின்சாரம் தயாரிக்கும் ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு அந்தந்த ஆலைகளிலேயே உள்ளது. என்றும் தெரிவித்துள்ளார்.