சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன நிகழச்சியை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு வரும் 20-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்திருவிழா 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 19ஆம் தேதி திருத்தேரோட்டமும், 21ஆம் தேதி காலையில் ஆருத்ரா அபிஷேகமும் பிற்பகலில் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும் என ஆலய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவபெருமானின் பஞ்சசபையில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இந்த கோயிலில் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், எதிர்வரும் 21ம் தேதி நடைபெறவுள்ள ஆருத்ரா தரிசனத்திற்கு 20-ம் தேதி முதல் பக்தர்களுக்கு ஏற்கனவே அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன நிகழச்சியை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு வரும் 20-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஜன.8-ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.