நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முதன் முதலாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த வருடம் நடிகர் தனுஷின் நடிப்பில் வாத்தி திரைப்படமும் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கிறது.
வாத்தி,கேப்டன் மில்லர் உள்ளிட்ட தனுஷின் அடுத்த அடுத்த திரைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.மேலும் இந்த திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது இரண்டாவது படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.நடிகர் தனுஷின் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு பவர் பாண்டி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்த திரைப்படத்தில் நடிகர் ராஜ்கிரன் மற்றும் நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.நடிகர் தனுஷும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.இந்நிலையில் தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு தனது இரண்டாவது திரைப்படத்தில் இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறார் நடிகர் தனுஷ்.
மேலும்,இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து எஸ்.ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டான்,மாநாடு போன்ற திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி தந்தது இதனைத் தொடர்ந்து தற்போது தனுஷின் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா இணைய உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.