நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் (captain miller) திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவர், 2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக திரைத்துறையில் அறிமுகமானார்.
இந்த படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
இத்திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற பாராட்டை பெற்ற தனுஷ் இதனைத் தொடர்ந்து திருடா திருடி, தேவதையைக் கண்டேன் சுள்ளான், என பல திரைப்படங்களில் நடித்து பிலபலமானார்.
கோலிவுட், பாலிவுட், டொலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் மாஸ் காட்டி வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட படங்களும் ஹிட்டடித்தன.
இந்த நிலையில், தனுஷ் தற்போது, கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் “கேப்டன் மில்லர்”. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார்.
மேலும் படத்தில் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், சிவராஜ்குமார் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இருந்து, கொம்பாரி வேட்டபுலி என்ற பாடலின் லிரிக்கல் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக இப்படத்தின் படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக் வெளியாகி மாஸ் காட்டிய நிலையில் அண்மையில் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான ஹைப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்களும் மிரட்டியுள்ளது டிரைலரில் தெளிவாக தெரிகிறது.
கேப்டன் மில்லர் (captain miller) திரைப்படம் வெளியாக உள்ளதால், படம் குறித்து அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. இத்திரைப்படம், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
https://itamiltv.com/breaking-judgment-on-minister-senthil-balaji-bail-plea-on-12th/
இந்த நிலையில், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க உத்தரவிடக் கோரி சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜரானார்.
படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதால், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையங்கத்தினர் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள். அதனால் தகுந்த தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
https://x.com/ITamilTVNews/status/1744607027266273626?s=20
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கேப்டன் மில்லர் படத்தை 1166 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் தகுந்த நடவடிக்கைகளை தனியார் மற்றும் அரசு இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்கள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.