காதல் கதையை மையமாக கொண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கிய அட்லீ, முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.
காதலிப்பவர்கள் காதலித்தவர்களையே திருமணம் செய்வதில்லை. ஆனால், முதல் காதல் மனதின் ஆழத்தில் என்றும் இருக்கும் என்ற எதார்த்தத்தை ராஜா ராணி படத்தின் மூலமாகசொல்லி இருக்கிறார்.
இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்துள்ள இயக்குனர் அட்லீ, தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கடந்த 2014- ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் அட்லீ. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
திருமணம் நடைபெற்று 8 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை அட்லீ பிரியா தம்பதிகள் சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில், இயக்குநர் அட்லீ, பிரியா அட்லீ தம்பதிகள் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
அதில், எல்லோரும் சொன்னது சரிதான். அதில் பெற்றோர் எனும் பயணத்தை நாங்கள் இனிதே இன்று தொடங்குகிறோம் என பிரியா தெரிவித்துள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் அட்லீ பிரியாவுக்கு இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.