மாதம் பிறந்து சம்பள பணம் கையில் வந்தவுடன் தங்காமல் தண்ணீராக செலவழிக்கிறது என்று பலரும் புலம்புவதை கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி பணம் வீண் விரையும் ஆகாமல் இருக்கவும், செலவு குறைந்து சேமிப்பாக மாறி பல மடங்கு பெருக வேண்டும் என்றால்,
சம்பளம் வாங்கிய உடன் ஒரு சில பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதாவது, சம்பளம் வந்தவுடன் முதலில் மருத்துவ செலவு செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இரண்டாவதாக, கடன் கொடுப்பது, கடன் வாங்கினால் கொடுக்கத்தான் வேண்டும். ஆனால், சம்பள பணம் கைக்கு வந்தவுடன் முதலில் கடனுக்காக பணத்தை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இதை செய்வதால் பணம் கையில் தாங்காமல் செலவழிந்து விடும்.

மூன்றாவதாக சம்பளம் வாங்கியவுடன் ஆடை அணிகலன்கள் போன்றவற்றை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவசியம் இருப்பினும் முதல் செலவாக செய்யாமல் அதை பிறகு வாங்கி கொள்வது நல்லது. இதனால் வீண் விரயங்கள் தவிர்க்கப்பட்டு பணம் சேரும்.
அப்படியென்றால் முதலில் என்ன பொருள் வாங்க வேண்டும்..?
பொதுவாக வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் பொருட்களை வாங்கும் பொழுது உங்களின் பண வரவு அதிகரிக்க்கும். சம்பளம் வந்தவுடன் மல்லிகை பூவை முதலில் வாங்குவதும் பணவரவை அதிகரிக்கும்.

இவையெல்லாம் நாம் புதிதாக செய்யப்போகும் விஷயங்கள் கிடையாது. நம் வீட்டு முன்னோர்கள் கடைப்பிடித்த பழமையான முறைகள் தான் இவை. இன்றைய கால சூழ்நிலையில் நாம் இவையெல்லாம் மறந்து விட்டோம்.