சூர்யா ஜோதிகாவின் மகள் தியா 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் வாங்கியுள்ள மதிப்பெண் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தின் கீழ் ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் மாணவர்களை விட மாணவியர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
மார்ச் ஒன்றாம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
4,08,440 மாணவிகளும், மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்களும் அடங்குவர் .12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன.மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: இளையராஜா – வைரமுத்து விவகாரம்; என்ட்ரியான ஏ.ஆர்.ரஹ்மான்
இந்த நிலையில்சூர்யா ஜோதிகாவின் மகள் தியா 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் வாங்கியுள்ள மதிப்பெண் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சூர்யா ஜோதிகா.பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் காதல் வயப்பட்ட இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.
சூர்யா ஜோதிகா இருவருக்கும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2007 ஆம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்ட நடிகை ஜோதிகா தற்போது மீண்டும் திரைப்படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாள படங்களிலும் நடித்து வரும் ஜோதிகா தற்போது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.மேலும், சூர்யா தற்போது அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சூர்யா ஜோதிகா தம்பதியின் மகள் தியா 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்த நிலையில், இன்று பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.
தமிழ் -96, ஆங்கிலம் 97, கணக்கு -94, பிசிக்ஸ் -99, கெமிஸ்ட்ரி -98, கம்பியூட்டர் சயின்ஸ் 97, என மொத்தம் 600க்கு 581 மதிப்பெண் எடுத்துள்ளார் தியா.
சூர்யா ஜோதிகாவின் மகள் இவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளாரே அருமை என நெட்டிசன்கள் அனைவரும் தியாவின் மதிப்பெண்களை இணையத்தில் வைரலாக்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.