இழந்த அரசியல் செல்வாக்கை மீட்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துடித்துக்கொண்டிருப்பதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ரகுபதி கூறியதாவது :
தினமும் விடிந்து எழுந்தவுடன் தனது அரசியல் ஆதாயத்திற்காக, அரைத்து அரைத்து புளித்த அதே பொய்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
இன்று உயர் நீதிமன்றமே எதிர்கட்சிகளின் செயலை தாங்கமுடியாமல் அவர்கள் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளது; ‘எதிர்க்கட்சிகள் வெறும் விளம்பர நோக்கில் இந்த விவகாரத்தை அணுகுவதாக கூறி’ கடுமையாக கண்டித்துள்ளது.
Also Read : தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் – குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது..!!
எடப்பாடி பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை வைத்து தனது இழந்த அரசியல் செல்வாக்கை மீட்க துடிக்கும் அரசியலை செய்து வருகிறார்.
NCRB தேசிய குற்ற ஆவண காப்பகம் இறுதியாக வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் மிக மிக குறைவாகவே உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராய் வீண் வதந்தி பரப்பி அச்சுறுத்த நினைக்கும் பொய்ச்சாமிகளை மக்களே புறந்தள்ளுவர் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.