முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியும், முன்னாள் டிஐஜியுமான பொன் மாணிக்கவேல் சென்ற கார் திண்டிவனம் அருகே விபத்தில் சிக்கிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பொக்கிஷங்களாக பார்க்கப்படும் பழங்கால சிலைகளை திருடி பல கோடிகளுக்கு வெளிநாட்டில் விற்ற கொள்ளை கூட்டத்தை கண்டுபிடித்து பெயரையும் புகழையும் பெற்றவர் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியும், முன்னாள் டிஐஜியுமான பொன் மாணிக்கவேல்.
இந்நிலையில் சென்னையில் இருந்து திருச்சிக்கு காரில் சென்றுகொண்டிருந்த பொன் மாணிக்கவேல் திண்டிவனம் அடுத்த தென்பசார் அருகே எதிர்பாராத விபத்தில் சிக்கியுள்ளார் .
சாலையில் சென்றுகொண்டிருந்த போது பொன். மாணிக்கவேலின் கார், நிலைதடுமாறி, மினி வேன் மீது மோதியதாக கூறப்படுகிறது . இந்த விபத்தில் காரின் பக்கவாட்டில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அதே சமயம் முன்னாள் காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல்,இந்த விபத்தில் எந்த வித காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .