இத்தாலியில் நபர் ஒருவர் உண்மையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பமின்றி, தன் போலி கையில் தடுப்பூசியைச் செலுத்தி தடுப்பூசி சான்றிதழ் பெறமுயன்றதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுமார் 50 வயதுள்ள அந்த நபர், யாரும் கண்டு பிடிக்க மாட்டார்கள் என நினைத்து, சிலிகான் மோல்டால் தன் கரங்களை மூடிக் கொண்டு தடுப்பூசி செலுத்த சென்றுள்ளார்.
செவிலியர் அந்த நபருக்கு தடுப்பூசி செலுத்த அவரது கை பகுதியில் உள்ள சட்டையை நீக்கிவிட்டு கைகளைத் தொட்ட போது, அவரது தோல் ரப்பரைப் போன்றும், குளிர்ச்சியாகவும் இருந்ததுள்ளது. மேலும் அவரது தோலின் நிறமும் வெளிரி இருந்துள்ளது.
இதனை அடுத்து போலியான கை என தெரிந்து கொண்ட செவிலியர் காவல்துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினார். இது தொடர்பாக அந்நாட்டு காவல்துறை விசாரித்து வருகின்றது.
தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சான்று பெற முயன்ற நபர் ஒரு சுகாதாரப் பணியாளர் என்பதும் இத்தாலி நாட்டில் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.