மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (February 1st)
மேஷம் :
வீட்டில் மராமத்துப் பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். நண்பர்களால் உதவி உண்டு. வியாபாரம் பெருகும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
துர்கையை வழிபாடு நன்மை தரும்.
ரிஷபம் :
நினைத்த காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.
பிப்ரவரி 1 : அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை!
மிதுனம் :
உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் செலவுகளும் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
காஞ்சி காமாட்சி அம்மன் வழிபாடு நன்மை தரும்.
கடகம் :
தெய்வ அனுகூலம் கிடைக்கும் நாள். இன்று உங்கள் காதலரை சந்திப்பீர்கள். கருத்து வேறுபாடுகள் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். வியாபாரம் அமோகமாக இருக்கும்.
சாய் பாபா வழிபாடு நினைத்ததை நிறைவேற்றும்.
சிம்மம் :
எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்யோன்யம் அதிகரிக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படும்.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
கன்னி :
சோர்வுகள் நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கி வியாபாரம் பெருகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் உதவியால் காரியஅனுகூலம் உண்டாகும்.
மகா லட்சுமியை வழிபாடு நன்மை தரும்.
துலாம் :
இன்று மிகவும் உற்சாகமான நாள். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
சூரிய பகவான் வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம் :
நினைத்த காரியம் நிறைவேறும். தொடர் முயற்சியால் அலைச்சல் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பலன் கிடைக்கும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
குலதெய்வ வழிபாடு துணை நிற்கும்.
தனுசு :
வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். தொழிலில் நம்பிக்கையை இழக்காமல் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
முருகப்பெருமானை வழிபடுவது நன்று.
மகரம் :
தெய்வ அனுகூலம் நிறைந்த நாள். வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர உதவிகள் கிடைக்கும்.
மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம் :
சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.
அம்பிகை வழிபாடு அனுகூலமான பலன்களைத் தரும்.
மீனம் :
துணிச்சலுடன் செயல்படும் நாள். வியாபாரம் பெரும். புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.
சிவ பெருமான் வழிபாடு நன்மை தரும் (February 1st).