ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் சென்னை – புதுச்சேரி இடையே பலத்த சூறைக் காற்றுடன் நேற்று நள்ளிரவு கரையை கடந்தது .
Also Read : இந்திய ஆடோமொபைல் சந்தைக்குள் டெஸ்லாவின் வருகை சாத்தியமா..?
இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புயல், மழையால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைக்க, மூடப்பட்டிருக்கும் கல்வி நிறுவனங்களை உடனடியாக திறக்க கோரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுமட்டுமின்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.