ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் காவிரி நீரால் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும், ஆற்றில் இறங்கவோ, அருவிகளில் குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது . இதனால், ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதையடுத்து ஒகேனக்கலில் மாவட்ட நிர்வாகம் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும், ஆற்றில் இறங்கவோ, அருவிகளில் குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், தமிழ்நாட்டு எல்லையான பிலிகுண்டுக்கு வந்து | சேர்ந்தது . இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 5,100 கன அடியாக உள்ளது என்றும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது .