ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா நடிப்பில் வெளியான Parking திரைப்படம் OTTயில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, ராமா ராஜேந்திரா, இளவரசு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் சக்க போடு போட்ட இப்படம் OTTயில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 30-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அழகிய போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.