ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது .
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது . இதனால், ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது .
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .
கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் தமிழகம் வந்தடைந்தது . இதனால் ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு, திடீரென உயர்ந்துள்ளது .
நேற்று முன்தினம் கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 7,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் நீர்வரத்து உயர்ந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 6,500 அதிகரித்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.