பத்மஸ்ரீ விருது பெற்ற, ஹிந்துஸ்தானி இசை கலைஞர்(Hindustani Singer) உஸ்தாத் ரஷித் கான் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்துஸ்தானி இசை பாரம்பரியத்தின் பாரம்பரிய இசைக்கலைஞரான உஸ்தாத் ரஷித் கான் உத்திர பிரதேச மாநிலத்தில் படாயுனில் 1968 இல் பிறந்தார்.
கரானாவின் நிறுவனர் இனாயத் ஹுசைன் கானின் பேரனான உஸ்தாத் ரஷித் கான், தனது 11 ஆவது வயதில் தனது முதல் இசைக் நிகழ்ச்சியை நடத்தினார்.
இவர் இந்தியாவில் பிரபலமாக அறியப்படும் இந்துஸ்தானி இசைக் கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பெருமைக்குரிய பல விருதுகளை வென்றுள்ளார்.
இவர் ஒரு ஹிந்துஸ்தானி இசை கலைஞராக( Hindustani Singer) இருந்தாலும், ஃப்யூஷன், பாலிவுட், டோலிவுட் போன்ற பல மொழி படங்களில் பிரபலமான பாடல்களையும் பாடியுள்ளார்.
குறிப்பாக ஜப் வி மெட், மை நேம் இஸ் கான் உள்ளிட்ட பல படங்களில் பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார்.
2022 ஆம் ஆண்டில், மத்திய அரசு இவருக்கு நாட்டின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது.
மேலும் படிக்க : https://itamiltv.com/rajini-in-lalsalaam-release-date-announcement/
மியூசிக் மேஸ்ட்ரோ என ரசிகர்களாலும், பிரபலங்களாலும் அழைக்கப்பட்டா உஸ்தாத் ரஷீத் கான், தனது 55வது வயதில் இன்று 3:45 மணிக்கு காலமானார்.
கடந்த சில வருடங்களாக புரோஸ்டேட் புற்றுநோயால் அவதிப்பட்டு பாதிக்கப்பட்டு போராடி வந்த ரஷித் கான், கொல்கத்தாவில் உள்ள பீர்லெஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
https://x.com/ITamilTVNews/status/1744701150161760754?s=20
இவரது உடல் இவரது உடல் இன்று மாலை 6 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் கொல்கத்தாவில் உள்ள பீஸ் ஹேவனுக்கு அனுப்பப்பட உள்ளது. நாளை இவரது இறுதி சடங்குகள் குடும்ப முறைப்படி நடைபெற உள்ளன.
இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.