illayaraja அன்பு மகளும் பிரபல பின்னணி பாடகியான பவதாரிணியின் உடல் இன்று தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி நெடு நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகிறது .
இதையடுத்து ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவின் பக்கத்துக்கு நாடான இலங்கைக்கு சென்றிருந்தார்.
பின்னர் அங்கேயே தங்கி தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளார் .
47 வயதாகும் பவதாரணி 5 மாதங்களாக கடுமையான உடல் நல பிரச்சனையில் இருந்ததாகவும் ஆங்கில மருந்துகள் உதவவில்லை என்பதால் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது.
மருத்துவர்களை எவ்ளோவோ முயன்றும் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் மாலை 5:20 மணிக்கு அவர் மரணம் அடைந்துள்ளார் .
இதையடுத்து நேற்று மாலை அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது . பின்னர் வீட்டில் அசலிக்காக வைக்கப்பட்ட பவதாரணியின் உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இளையராஜா இசையில் பாரதி என்ற படத்தில் ‘மயில் போல’ பாடலுக்கு பவதாரணிக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது .
இசையில் தனது குடும்பத்தினரை போல் மென்மேலும் பல சாதனைகளை பவதாரணி படைப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவரின் மரணம் நிகழ்ந்துள்ளது.
இளம் வயதிலேயே தேசி விருது பெற்ற பாடகி பவதாரணியின் மரணம் அவரது குடும்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் சோக கடலில் மூழ்கடித்துள்ளது.
தனது அன்பு மகளை இழந்து துடிக்கும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், பவதாரணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் .
திரையுலகினர் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் வருகின்றனர்.
இந்நிலையில் தேனீ லோயர்கேம்பில் உள்ள illayaraja பண்ணைவீட்டு வளாகத்தில் உள்ள இளையராஜாவின்
தாயார் மற்றும் மனைவியின் சமாதிகளுக்கு நடுவே பவதாரிணியின் உடலை கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர் .
இதற்கு மின் உடல் அடக்கம் செய்யும் இடமான லோயர் கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் ஏரளமான திரை பிரபலங்கள் பவதாரிணிக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.