20 வருட அரசியல் வாழ்க்கையில் பாரதிய ஜனதாவை போல ஒரு ஊழல் அரசை கண்டதில்லை என்று அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து இருக்கும் புட்டண்ணா (Putanna) பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில், பாஜக சார்பில் ஆசிரியர்கள் தொகுதியிலிருந்து மேலவை உறுப்பினராக கடந்த ஆண்டு பதவி ஏற்றவர் புட்டண்ணா (Putanna). இவருக்கான மேலவை உறுப்பினர் பதவி காலம் நான்கு வருடம் மீதமுள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார்.
கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் முன்னிலையில் அவர் தன்னை காங்கிரஸில் இணைத்து கொண்டார்.
மேலும், மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்றுதான் பாஜகவில் இணைந்ததாகவும் ஆனால், தனது 20 வருட அரசியல் வாழ்க்கையில் பாரதிய ஜனதாவை போல் ஒரு ஊழல் அரசை கண்டதில்லை என்றும், பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தான் எதிர்பார்த்தது போல் எந்த மக்கள் பணியையும் பாஜக அரசின் மூலமாக செய்ய முடியவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
தற்போது, கர்நாடகாவில் முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருவதால், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.