மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (January 31st)
மேஷம் :
இன்று எதிலும் தெளிவு பிறக்கும் நாளாக அமையும். எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் பெரும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
விநாயகர் வழிபாடு சுபிக்ஷம் உண்டாகும்.
ரிஷபம் :
கணவன் – மனைவி இடையே அன்பு, அந்யோன்யம் அதிகரிக்கும். காதலர்களுக்கு இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒன்று சேர்வர். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகள அதிகரிக்கச் செய்யும்.
ஜனவரி 31 : தங்கம் விலை குறைவு.. எவ்வளவு?
மிதுனம் :
தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்த்து நன்மைகளை அதிகரிக்கும்.
கடகம் :
இன்று உற்சாகத்துக்குக் குறைவிருக்காது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை அமோகமாக. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் தெளிவு பிறக்கும்.
துர்கை வழிபாடு வெற்றிகளை குவிக்கும்.
சிம்மம் :
நினைத்த காரியம் நிறைவேறும். அரசாங்க வகையில் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
விநாயகப் பெருமானை வழிபாடு வெற்றி தரும்.
கன்னி :
சோர்வுகள் நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கி வியாபாரம் பெருகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் உதவியால் காரியஅனுகூலம் உண்டாகும்.
மகா லட்சுமியை வழிபாடு நன்மை தரும்.
துலாம் :
புதிய முயற்சிகளில் சிரமம் ஏற்பட்டாலும் தொடர் முயற்சியால் வெற்றிநிச்சயம். கணவன் மனைவி, காதலர்கள் இடையே அன்பு அதிகரிக்கும. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம் :
வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். தொழிலில் நம்பிக்கையை இழக்காமல் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
முருகப்பெருமானை வழிபடுவது நன்று.
தனுசு :
இன்று மிககும் உற்சாகமான நாள். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
சூரிய பகவான் வழிபாடு நன்மை தரும்.
மகரம் :
தெய்வ அனுகூலம் நிறைந்த நாள். வியாபாரத்தில் வரவு அதிகரிக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர உதவிகள் கிடைக்கும்.
மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம் :
துணிச்சலுடன் செயல்படும் நாள். வியாபாரம் பெரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.
இன்று சிவபெரு மானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.
சென்னையில் நாளை பாமக பொதுக்குழு கூட்டம்!
மீனம் :
நினைத்த காரியம் நிறைவேறும். தொடர் முயற்சியால் அலைச்சல் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பலன் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
குலதெய்வ வழிபாடு துணை நிற்கும் (January 31st).