ஷாருக்கானின் மாஸான நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் . இப்படம் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ப்ரீ புக்கிங்கில் தரமான சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யனான அட்லீயின் இயக்கத்தில் பாலிவுட் பாஷா ஷாருக்கானின் அட்டகாசமான நடிப்பில் உருவான திரைப்படம் ஜவான் .

ரெட் சில்லிஸ் நிறுவனத்தின் ஏகபோக பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு , தீபிகா படுகோனே என பல உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்தது .

இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி நாளை திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகவுள்ள நிலையில் இப்படம் உலகளவில் ப்ரீ புக்கிங் எவ்வளவு நடந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது .
ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்து வரும் ஜவான் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் ப்ரீ புக்கிங் சிறப்பாக நடந்து வருகிறது . அதன்படி இப்படம் உலகம் முழுவதும் ப்ரீ புக்கிங்கில் ரூ.90 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தமிழ்நாட்டிலும் நல்ல புக்கிங் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.