Jayaram’s daughter got married : பிரபல நடிகர் ஜெயராமின் மகளான மாளவிகா ஜெயராமின் திருமணம் இன்று (03.05.24) கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் மிக எளிமையாக நடந்து முடிந்தது.
இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மலையாளம், தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய மாஸ் நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜெயராம். இவருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க :
இவரின் மகன் காளிதாஸ் மற்றும் மக்கள் மாளவிகா. மகன் காளிதாஸ் திரையுலகில் நடிகராக வலம் வருகிறார்.
இந்த சூழலில் தான் ஜெயராமின் மகள் மாளவிகாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நவனீத் க்ரிஷ் என்பவர் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நவனீத் க்ரிஷ் லண்டனில் பணிபுரிந்து வரும் நிலையில், மாளவிகாவும் நவனீத்தும் காதலித்து வந்துள்ளனர்.
நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்களின் காதலை வீட்டாரிடம் தெரிவித்து இருவீட்டார் சம்மதத்துடன் இன்று இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது.
கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் இவர்களின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது Jayaram’s daughter got married.
இவர்களின் திருமணத்தில் நடிகர்கள் மோகன்லால், அபர்ணா பால முரளி, சுரேஷ் கோபி உள்ளிட்ட நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.
அடுத்தபடியாக நடைபெற உள்ள இவர்களது திருமண வரவேற்பின் போது திரை உலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என தகவல் வந்துள்ளது.
இதையும் படிங்க :