பட்டி தொட்டி எங்கும் பட்டையகிளப்பி வரும் ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த புதிய சாதனை படைத்துள்ளது .
டார்க் காமெடிக்கு பெயர்போன இயக்குநர் நெல்சனுடன் கைகோர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர் . மிக பெரிய பட்ஜெட்டில் SUN PICTURES நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் தமன்னா, மோகன் லால்,பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .
ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ள இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்துள்ளார் . இப்படத்தின் இசை இசைவெளியீட்டு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .
பொதுவாக சூப்பர் ஸ்டாரின் படங்கள் என்றாலே அதன் ப்ரோமோஷன் விண்ணை தொடும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருக்கும் ஆனால் ஜெயிலர் படத்திற்கு அப்படி எந்த வித ப்ரோமோஷனும் நடந்ததாக தெரியவில்லை . ஒருவேளை இது நெல்சனின் தந்திற்றமாக கூட இருக்கலாம் .
ஏற்கனவே ஜெயிலர் படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் அதுவே இப்படத்திற்கு மிக பெரிய ப்ரோமோஷனாக அமைந்துவிட்டது .
அந்தவகையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘காவாலா’ பாடல் தற்போது புது சாதனை படைத்துள்ளது .
இளசுகள் காதுகளில் ஓயாமல் ஒலித்து தற்போது இணையத்தை கலக்கி வரும் இப்பாடலை இதுவரை 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.